வேறு வேலை இல்லா ஒரு நன்நாளில் மொட்டை மாடி சென்ற போது ,என் தெரு என்றுமில்லாமல் அன்று அழகாய் தெரிந்தது. தெருவையே பார்த்து கொண்டிருந்தால் நம்முடன் தெரு நிறைய பேசுவது போல் தோன்றும்,பொழுது போக ஒரு தெருவை வேடிக்கை பார்த்தாலே போதுமானது. தெரு என்பது ஒரு நிலையே, சாலைகளின் இருபுறமும் வீடிருந்தால் அது தெரு .தெருவென்றால் நிறைய நினைவுகள் சாலையில் செல்லும் ஊர்திகள் போல வரும் என் மனதில் - நான் நண்பர்கள் சேர்த்தது தெருவில் தாம், விளையாட்டு பயின்றது தெருவில் தாம், குழாய்யடி சண்டைகள் பார்த்தது தெருவில் தாம்,என் தாய் விரல் சேர்த்து நடந்தது தெருவில் தாம், விழுந்து ,எழுந்து,ஓடி என என் குழந்தை பருவத்தையும்,குட்டி சுவர் ஏறி கதை பேசுதல் என என் நிகழ்காலத்தையும் செதுக்கியது ,தெருகளுகும் ,தெருவெங்கும் நீண்ட பாம்பை போல் நெளிந்து சென்ற சாலைகளும் தாம் .
ஒவ்வரு மனிதருக்கும் இப்படி ஒரு தெரு இருக்கும் தானே? தெருக்கள் எல்லாமே சாலையில் சேர்கின்றன , சாலைகள் இங்கு தான் முடிகின்றன என்று யாரேனும் சொல்ல இயலுமா? நீக்கமற இருக்கும் காற்றை போல தான் சாலைகள் போலும். எல்லா சாலைகளுக்கும் ஒரு தொடர்பு உண்டு , அது நமக்கும் நம் தாய்க்கும் இருந்ததை போல ஓர் உறவு ,ஒவோவ்ர் சாலையும் ஒரு தெருவோடு இணைக்கப்பட்டுள்ளது , ஒவொவொரு தெருவும் பல மனிதர்களின் கனவுகளையும் ,நிராசைகளையும் தனகத்தே கொண்டதல்லவா ? அப்படி பார்த்தால் ஒரு சாலை மனிதர் அனைவரையும் இணைக்கும் ஒரு தொப்புள் கோடி உறவுதானே? ஒவோர் சாலையிலும் ஒரு தனி மனிதனின் வலியும்,ஆற்றாமையும் உள்ளது தானே ? ஒரு வேலை நாம் சாலையில் பார்க்கும் கானல் நீர் கூட அப்படி பட்ட வலிகள் தாமோ?
I can't find these much informations from a street i go to terrace for a call or for bird watching :) what a wonderful thought only can be given by few better be a poet man
ReplyDeleteஇடுகையின் சிந்தனை வெகு அருமை !!
ReplyDelete@ Pristley thanx 4 d comments!!
ReplyDelete@ பாலா அண்ணா நன்றி !!!
ReplyDeleteசொற்சுவை, பொருட்சுவை நிரம்ப கற்பனை நயம் நிரம்ப எழுதியுள்ளாய்.
ReplyDeletehey .. i speak littttle ta mil..
ReplyDeletebut ur words were nice
@ sankar thanx da..
ReplyDelete