Saturday, January 7, 2012

சென்னை புத்தகவிழா -2012



வாங்கிய புத்தகங்கள்:
  1. யாமம்- ராமகிருஷ்ணன்
  2. நெடுங்குருதி - ராமகிருஷ்ணன்
  3. கோபல்லகிராமம் - கி. ரா
  4. தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில்நாடன்
  5. வண்ணத்து பூச்சி வேட்டை - சுஜாதா 
  6. கனவு மெய்பட வேண்டும் - தமிழ்அருவி மணியன்
 
நிறைகள்:
  • s.ராமகிருஷ்ணன் , மனுஷ்யபுத்திரன் போன்ற எழுத்தளர்களின் வருகை மற்றும் கலந்துரையாடல் - உயிர்மை மற்றும் காலசுவடின் கூட்டத்திற்குஎழுத்தளர்களின் வருகை ஒரு பெரிய காரணம் என்று நினைக்கிறன்.
  • இவ்வருடம் எழுத்தாளர் வாசகர் சந்திப்புகளுக்கு என ஒரு இடம் கொடுத்தது சிறப்பு. 
  • தமிழ் புத்தகங்களின் தரம் பல மடங்கு உயர்ந்துள்ளது -  ஹிக்கின் போதம்ஸ் கடையில் உள்ள ஆங்கில  புத்தகங்களுக்கும், உயிர்மையின் புத்தகங்களுக்கும் இப்போது பெரிய வேறுபாடு இல்லை.
  • மிக சிறப்பான வசதிகள் - பார்கிங் முதல் கிரெடிட் கார்டு வரை மிக நன்றாக யோசித்து செய்திருகிறார்கள்.


குறைகள் :
  • மிக குறைந்த ஆங்கில புத்தகங்கள் - landmarkum , ஹிக்கின் போதம்ஸ் உம் பெரிதாய் முயற்சி செய்யவே இல்லை :(.
  • வேறொன்றும் சொல்லும் அளவு மோசம் இல்லை.

நான் பார்த்த வரையில் பொன்னியின் செல்வன் தான்
அதிகமாய் விற்று தீர்த்தது - கல்கியின் எழுத்து ஓர் அதிசயம் !

தகவல்கள் :

உயிர்மையில் மனுஷ்யபுத்திரன் மற்றும் S.ராமகிருஷ்ணன் போன்றோரை மாலை  சென்றால் சந்திக்க வாய்ப்புண்டு
காலசுவடில் ஒன்று புத்தகத்திற்கு ஒன்று இலவசம் ( ௫5௦௦ இகு மேல் வாங்கினால்)
விகடனில் பொன்னியின் செல்வன் ம.செ
வின் ஓவியங்களுடன் கிடைகிறது ஆனால் விலை தான் சற்று அதிகம் - ரூ.1200 .


 


 




Saturday, June 4, 2011

அப்பாவும் நானும் !!

ஏதோ ஒரு சிந்தனையில் இருக்கும் போது அப்பாவின் ஞாபகம் வந்தது.இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ஒரு சிற்றுண்டி சாலையில்  பரோட்டா சாப்பிடும்  போது என் எதிரில் அமர்ந்திருந்த ஒரு சிறுவனையும் அவன் அப்பாவையும் பார்த்த போது என் நினைவுகள் அப்பாவை நோக்கி  நகர்ந்தது. எழுத்துகளும் ஊடகங்களும் தாய்மையை கொண்டாடும் அளவு தந்தையின் உலகத்தை கொண்டாடுவதில்லை என்பது என் கருத்து. அம்மாவின் அன்பு அளப்பரியது ஒத்து கொள்ள தான் வேண்டும் ஆனால் அதற்கு சற்றும் குறைந்ததல்ல அப்பாவின் பாசமும்!அப்பாவை பார்த்து அவர் சொல்லி கொடுக்கமலே ஏகலைவர்களாய் நாம் கற்று கொண்டது ஏராளம்.  எண்ணி பார்த்தால் நான் என் தந்தையிடம் கற்ற விசயங்களை சொல்லி கொடுக்க பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும்  நூறு ஆண்டுகள் வேண்டும். வண்டி ஓட்டும் விதம் முதல் நான் சாப்பிடும் விதம் வரை என் வாழ்வின் ஒவ்வ்வோர்  அசைவிலும்  என் தந்தையின் நிழல்  இருப்பதை  உணர்கிறேன். ஒரு மகனை  குழந்தையாய் பார்ப்பது  தாய் என்றால் அவனை  ஓர் மனிதனாய் பார்ப்பது அவன்  தந்தை தான்-எல்லாம் தெரிந்த தணை  யானையாய்  தாழ்த்தி பாகனாய் ஒன்றும் தெரியாத தன் குழந்தையை உயர்த்தும்  பேரன்பு  தந்தையுடையது. 
அம்மாவிற்கும் எனக்குமான உறவு ஒரே மாதிரியாக தான் உள்ளது(அவளுக்கு நான் என்றுமே குழந்தை தான் !!) ஆனால் என் அப்பாவுடனான பந்தம் பல்வேறு பரிமாணங்களை கண்டுள்ளது எனக்கே ஆச்சர்யமான ஒன்று- உங்கள் அப்பாவிடம் பத்து ஆண்டுகளுக்கு முன்பாக பேசிய ஒரு விசயத்தை மீண்டும் இன்று பேசுங்கள் நான் சொல்லும் உண்மையின் வீரியம்  புரியும். ஒரு பிள்ளையின் முதல் ஆசான்  அப்பா தான். என் கற்றல்கள் அனைத்தும் என் தந்தையின் மூலமாக தொடங்கியது தான்- கோலியில் ஆரம்பித்து பரோட்டா சாப்பிடுவது வரை என் அப்பாவிடம் கற்றது தான். என் மேல் நான் நம்பிக்கை வைக்க  தொடங்கிய தருணம் என் அப்பா என் மீது நம்பிக்கை கொண்டு சைக்கிள் சீட்டிலிருந்து கையெடுத்த அந்த அழகான நொடியில் தான் ! முதன் முறை எழவு பார்த்து நடுங்கியபோதும்,இறைச்சி கடையில் முதல் ரத்தம் பார்த்த போதும்,முதல் முறை அருவியின் வேகம் அறிந்த போதுமான  பொழுதுகளில் நான் கோழிகுஞ்சாய் சுருங்கி  பற்றியது என் அப்பாவின் விரல்களையே .2 ஆம் வகுப்பில் பம்பரம் கேட்ட போது எனகேன்றே ஆசாரியிடம் சொல்லி செய்த என் பெயர் பொறித்த பம்பரதுடன் என் அப்பாவை கட்டி கொண்ட பொழுதுகளும் ,நான் வேலை தேடி செல்லும் போது அப்பா  என் பைல் துடைத்து அடுக்கிய பொழுதுகளுமான  நினைவுகளும் ஏனோ  இதை எழுதும் போது நிரம்பி வழிகின்றது.  மகன்கள் அப்பாவிடம் முரண்படும் சமயம் அவர்கள் தனக்கென ஒரு அடையாளம் தேடும் போது தான் - அவர்களது 16 முதல் 20 வயது போது தன் தனித்துவத்தை நிருபிக்க பார்க்க முயன்று தான் தன் தந்தையின் நிழல் என்றுனறந்து  தோற்கும் போது வரும் கோபங்களே அந்த வயது முரண்களாக மாறுகின்றன. அதன் காரணமாய்   தான் அம்மா நெருங்கியவள் ஆகி விடுகிறாள் அப்பா பொல்லாதவர் ஆகிவிடுகிறார் !!!இதில் வேதனையான விஷயம் என்னவென்றால்   வயது கடந்த பின்பும் பலர் இந்த வட்டத்தை விட்டு வருவதே இல்லை- பின்னர் உணர நேரம் இராது ,இருக்கும் நொடியில் அப்பாவின்  உலகம் சென்று பாருங்கள் அன்று புரியும் அப்பாவின் உலகை தாங்கி சுற்றும் அச்சு நீங்கள் என்று.

Sunday, June 27, 2010

நெரிசல் நகரம் !!!

 இன்றோடு நான் சென்னை வந்து ஒரு மாதம் ஆகிறது.நகரம் என்பது ஒரு ஓய்விலாத அரக்கன் போல , எவ்வளவு பேரை உண்டாலும் அதன் பசி ஓய்வதில்லை .

 உணவு தேடி  செல்லும் எறும்புக் கூட்டம் போல் மக்கள் எதையோ தேடி நகரம் நோக்கி வருகிறர்கள். சிலர் சாதிக்க வேண்டும் என்றும், சிலர் வறுமையை வெல்லவும் வந்தாலும், பலரை உந்தி தள்ளுவது அரை சாண் வயிறு தான். வயிற்று பிழைப்புக்காக நகரம் பெயர்பவர்கள் தான் அதிகம் என்பதே உண்மை. ஒரு நகரம் என்பது ஒரு இடம் என்பதை விட அது எனக்கு  ஒரு கொதிநிலை யாகவே தோன்றுகிறது . எப்போதும் யாருக்கும் யார் மீது எரிச்சலும் கோபமும் புகைந்து கொண்டே  இருக்கும் ஒரு மாறாத எரிகலனே நகரம் என்பது.காரில் போபவனுக்கு பைக்கில் போபவன் மீதும், நடப்பவனுக்கு  நிற்காத பேருந்தின் மீதும்,  அடித்தட்டு மக்களுக்கு சாப்ட்வேர் நிறுவன இளைஞர்கள் மீதும் எப்போதும் ஒரு பெருங்கோபமும் எரிச்சலும் இருந்து கொண்டே தான் இருக்கிறது .அந்த கோபமும் முர்கமுமே மக்கள் பற்றிய அலட்சியத்தை  உண்டாகுகிறது.  ஒரு நகரம் என்பது கனவுகள் பலவற்றை தன்னுளே அடக்கிகொண்டு,திமிறும் குதிரையின் வேகத்தோடு நாள்தோறும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. இங்கு பேருந்தினுள் வியர்வை வாசனையும், அவசர துரிதங்களும்,தங்கள் பணத்தை பாதுகாப்பதுமே  பிரதானம். நகரத்தில் மக்கள் வாழ்வதில்லை , மாறாக வேட்டையாடுகிறார்கள் தன் வாழ்க்கைக்காக ,வேறொருவன் தன் இடம் கொண்டு செல்ல கூடாது என்பதற்காகவும் வேட்டையாடுகிறார்கள் .தங்களை மிகபெரும் நாகரிக சமுதாயமாக காட்டிக்கொள்ள முற்படும் நகரத்தார்கு தாம் இன்னும்  இரண்டாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட வாழ்கை வாழ்வது புரிவதில்லை ! அன்று மிருகத்தை வேட்டையாடியவர்கள் இன்று சக மனிதரை வேட்டையாடுவதில் இன்பம் காண்கிறார்கள். ஆனால் , நாங்கள் முன்னேறியவர்கள் என்று வெட்கம் இல்லாமல் மார்நிமிர்த்தி பேசுகிறார்கள். நான் நேற்றிருந்ததை விட  இன்று வளர வேண்டும் என்று நினைப்பதே வளர்ச்சி ஆனால் இங்கோ , அவன்/அவளை விட நான் பெரியவன் என்று நிருபித்தால் நான் திறமைசாலி !!!அழகை மனதில் பார்க்காமல் நிறத்திலும், பணத்திலும் பார்க்கும் ஒரு தட்டு மக்களும், தங்கள் வேர்களை விட முடியாமல் இந்த விளையாட்டிலும் கலக்கமுடியாமல் தவிக்கும் ஒரு தட்டு மக்களும் இது ஏதும் தெரியதாமல் இந்த கான்கிரிட் காட்டுக்குள் புதிதாய் நுழையும் மக்களையும் தினம் பார்த்து சிரிக்கிறான் நெரிசல் நகர அரசன் .

Monday, May 24, 2010

பூட்டு சாவி !!!

நான் இப்போதைக்கு வெட்டி ஆபிசர். பொழுது போகாமல் கல்லூரியில் தொடாத  பாடபுத்தகத்தையே  மீண்டும் படிக்குமளவு சும்மா இருக்கிறேன் என்றல் புரிந்து கொள்ளுங்கள் என் நிலைமையை !!! அப்படி ஒரு இனிய (???!!! ) தருணத்தில்  என் வீட்டு பூட்டு கண்ணில்  பட்டது .  வீட்டில் உள்ள பூட்டுகளை உற்று  பார்த்தபோது என் தொலைந்து போன சாவிகளின் நினைவு வந்தது. நினைவு தெரிந்தது முதல் இன்று வரை என்னால் சாவிகளை பத்திரமாக வைத்து கொள்ள முடியாது விளைவு, என் வீட்டில் இன்று வரை பல சாவி இல்லா பூட்டுகள் உண்டு.

அப்படி பட்ட பூட்டு ஒன்று இன்று என் கண்ணில் மாட்டி கொண்டது . பூட்டு என்று  ஒன்று இருந்தால் , சாவி என்றும் ஒன்று இருத்தல் வேண்டுமே ? தொலைந்து போன அச்சாவி  இன்று என்னவாய் போயிருக்கும் என எண்ணம் தோன்றியது. வீட்டின்  ஏதோ ஒரு பரணிலோ ஒரு பெட்டியிலோ இருக்கலாம், இல்லை எனில்  ஏதோ ஒரு சாலையில் மண்ணோடு ஒன்றாய் போயிருக்கலாம் ,அன்றி மழையில் பயணித்து ஏதோ ஒரு குட்டையிலும் இருக்கலாம்.  அந்த சாவி இல்லாததால் என் வீட்டு பூட்டு பயனற்று கிடக்கிறது ( எங்க வீட்டு பூட்டுக்கு எக்ஸ்ட்ரா சாவி கிடையாது -அதையும் நான் தான் தொலைத்தேன் !!! [:D])  பூட்டு சாவி என்பது நகைக்கும் பணத்துக்கும் மட்டுமே உரியது அன்று ! நம் மனதுக்கும் உண்டு !!!
என் தொலைந்து போன சாவியை போல நம் எல்லோர் மனதிலும் ஒரு தொலைக்கப்பட்ட சாவியும் அதனால் திறக்கப்படாத   பூட்டும் உண்டு தானே? அந்த சாவிக்கு ஒரு உருவம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் வடிவம் அன்றி இராது. அந்த சாவி சொல்லாகவோ , ஒரு செய்கையாகவோ, ஒரு வலியாகவோ இருக்கலாம் .நான் ஒரு முறை பட்ட அவமானத்தினால்  நான் என் பள்ளி வாழ்கையில் மேடைஏறியதே  இல்லை (என் எட்டாம் வகுப்பு தொடங்கி பன்னிரெண்டாம் வகுப்பு வரை நான் ஒரே ஒரு முறை தான் மேடை ஏறிநியன் )என்னை பொறுத்த வரையில், ஒரு சொல்லோ,அவமானமோ  அல்லது செயலோ நாம் கொண்ட உறவையோ, செய்த செயலையோ நம்மிடதேயிருந்து  துண்டிக்க வைக்கிறது , அந்த சொல்லும் ,செயலும் அந்த உறவையும் செயலையும்  பூட்டிவிடுகிறது. அந்த சொற்களின் அல்லது செயலின்  வீரியத்தை பொறுத்தே  அந்த பூட்டு திறப்பதும் அல்லது சாவி தொலைக்கபடுவதும் நடக்கிறது .நம் ஒவ்வோற்குள்ளும்   இப்படி தொலைக்கப்பட்ட சாவிகள் எத்தனை? சாவி அற்ற பூட்டுகளாக நம்மில் தங்கியிருக்கும் வலிகள் தான் எத்தனை? சாவி இல்லாவிட்டாலும் என் வீட்டில் பூட்டுகளை யாரும் தூக்கி போடுவதில்லை , அவை பயன் தராது வெறும் சுமையே  என்ற போதும்  ,வலிதான் என்றாலும் நாம் பூட்டுகளையும் ,அந்த நினைவுகளையும் தூக்கி எறிய முடிவதில்லை . ஏன்? என்றாவது சாவி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலோ ?     

Tuesday, April 20, 2010

சாலைகள் !!!

வேறு வேலை இல்லா ஒரு நன்நாளில் மொட்டை மாடி சென்ற போது ,என் தெரு என்றுமில்லாமல் அன்று அழகாய் தெரிந்தது. தெருவையே பார்த்து கொண்டிருந்தால் நம்முடன் தெரு நிறைய பேசுவது போல் தோன்றும்,பொழுது போக ஒரு தெருவை வேடிக்கை பார்த்தாலே போதுமானது. தெரு என்பது ஒரு நிலையே, சாலைகளின்  இருபுறமும் வீடிருந்தால் அது தெரு .தெருவென்றால் நிறைய நினைவுகள் சாலையில் செல்லும் ஊர்திகள் போல வரும் என் மனதில் - நான் நண்பர்கள் சேர்த்தது தெருவில் தாம், விளையாட்டு பயின்றது தெருவில் தாம், குழாய்யடி சண்டைகள் பார்த்தது தெருவில் தாம்,என் தாய் விரல் சேர்த்து நடந்தது தெருவில் தாம்,  விழுந்து ,எழுந்து,ஓடி என என் குழந்தை பருவத்தையும்,குட்டி சுவர் ஏறி கதை பேசுதல் என என் நிகழ்காலத்தையும் செதுக்கியது ,தெருகளுகும் ,தெருவெங்கும் நீண்ட பாம்பை போல் நெளிந்து சென்ற சாலைகளும் தாம் .


ஒவ்வரு மனிதருக்கும் இப்படி ஒரு தெரு இருக்கும்  தானே?  தெருக்கள் எல்லாமே சாலையில் சேர்கின்றன , சாலைகள் இங்கு தான் முடிகின்றன என்று யாரேனும் சொல்ல இயலுமா? நீக்கமற இருக்கும்  காற்றை போல தான் சாலைகள் போலும். எல்லா சாலைகளுக்கும் ஒரு தொடர்பு உண்டு , அது நமக்கும் நம் தாய்க்கும் இருந்ததை போல ஓர் உறவு ,ஒவோவ்ர் சாலையும் ஒரு தெருவோடு இணைக்கப்பட்டுள்ளது , ஒவொவொரு தெருவும் பல மனிதர்களின் கனவுகளையும் ,நிராசைகளையும் தனகத்தே கொண்டதல்லவா ? அப்படி பார்த்தால் ஒரு சாலை மனிதர் அனைவரையும் இணைக்கும் ஒரு தொப்புள் கோடி உறவுதானே? ஒவோர் சாலையிலும் ஒரு தனி மனிதனின் வலியும்,ஆற்றாமையும் உள்ளது தானே ? ஒரு வேலை நாம் சாலையில் பார்க்கும் கானல் நீர் கூட அப்படி பட்ட வலிகள் தாமோ?

Thursday, April 1, 2010

Losing and Vendetta

     I had thought about why we think of paying back . There are several perspectives to look at the scenario but i look at  one why which i had experienced few weeks before. I did attend an interview for Deloitte which is one of the biggest companies in the world. Me and my closest friend were shortlisted and after a week the company announced the final results wherein my friend went through while I didn't.  I couldn't get good sleep after that night coz being successful he would have forgotten that interview at all. But for me, it was like an old tape playing back in my head again and again and every second of a interview went through my head again and again while i was checking for the possible mistakes i could have done.When i extend this idea i find that people who lose go for vendetta coz they can never get over things  while the winner can easily forget that and move forward. its that feeling thats pushes people to do something so that the play back at the back of their head would stop.Thats the reason for all suffering , to end a suffering deep inside their mind they give as much of pain to fellow beings thinking that would undo the pain in their minds. But , fact is blood can never be washed by blood and  even if they succeed  in giving people their payback the loser here again nurtures the hatred for the other and this endless cycle continues amidst the cries of humaneness which loses its breath with every growing vigor for vendetta.

Wednesday, March 31, 2010

studying in uk


well, to start off with I am an Engineering graduate with offers from almost every university  in U.K. So i thought I could share few things on applying to universities in U.K.
      U.K ranks top amongst the hotspots for learning masters. The country has a very mixed populationa nd you would not find any racial abuses as with Australia or elsewhere.Like every foreign university U.K also has  two intakes during fall and spring . Apply for september intakke as you might have good chance of getting an offer as the number of availabe seats are higher.  The first step in applying to U.k is to have a valid passport as you need it for IELTS or TOEFL exams. The universities accept both the English tests and you need not give GRE for getting a seat in U.K. As soon as you receive your score card, check for the universities which would offer you seats based on the scores( mostly above 100 in TOEFL and band 7 in IELTS would do). Then you can apply online as its the fastes and safest means to apply to a university. Dont go for postal means as it takes hell lot of time to process and you should also shoulder the additional costs of postal expenses . So best apply through online using the university portal and pray that you get a seat.Wjile applying online, Scan all the relevant documents- your Marksheets( if you are currently pursuing your degree) else your degree scrolls and final transcripts, TOEFL or IELTS score card,Recommendation letter from two of your staffs(note that few universities like Nottingham have their own recommendation forms), and a letter of purpose which should state why you are interested in the university and course(about 2 pages) .After a month or so you would receieve the university's decision on your offer status decide upo fees and other issues and if you are satisfied accept the offer(that too can be made online).
If you are currently pursuing your UG then you would get conditional offer.submit your marksheets and degree scrolls as soon as you get them then scan and send it to the university so that your offer is made unconditional. Apply early because you need offer if you need to apply for any of the scholarship programs.